4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “நாங்க வேற மாறி” பாடல்.!

வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடல் யூடியூபில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாறி பாடலை நேற்று இரவு 10.45 மணிக்கு சோனி மியூசிக் சேனலில் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடல் சில மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது. மேலும், தற்போது யூடியூபில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.