புதுச்சேரிக்கு வந்தது 400 பேர் கொண்ட துணை ராணுவம்.! ஏன் தெரியுமா?

காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பிற்காக புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது.

புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 400 பேர் கொண்ட துணை ராணுவம் வந்துள்ளது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண்பேடியை கண்டித்து வரும் ஜனவரி 8-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுபோன்று முதல்வர் இல்லத்தை வரும் 8-ஆம் தேதி முற்றுகையிட போவதாக பாஜகவும் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்