இளைஞர்களின் கதாநாயகனாக விளங்கும் பகத்சிங்

எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைக்கு போராடியிருந்தாலும், தனது இளம் வயதிலேயே நாட்டுக்காக தன் உயிரை துச்சமென கருதி உயிர் தியாகம் செய்த மாவீரன் பகத் சிங்கின் நாட்டுப்பற்றானது இன்றளவும் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

1907-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-இல் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலம், பங்கர் கிராமத்தில், கிஷன் சிங் மற்றும் வித்யாவதி தம்பதியருக்கு மகனாக பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே இந்திய விடுதலை வேட்கை மற்றும் பொதுவுடமை கருத்துகளில் தீவிரமாக இருந்தார். அவரது இளம் வயதில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் அவரது மனதை பெரிதும் பாதித்து, பிற்காலத்தில் பகத்சிங்கை ஒரு விடுதலை போராட்ட வீரனாக மாற்றியது.

லாகூர் நீதிமன்றம் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில், பகத்சிங் மற்றும் அவரது போராளி தோழர்கள் ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தூக்கு தண்டனைக்கு முந்தய நாளிலும் தான் படிப்பதையும், எழுதுவதையும் கை விடாத பகத் சிங் இன்றும் நாட்டில் உள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு இன்றளவும் ஒரு முன்னோடியாக விளங்குகிறார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment