அப்பல்லோ மருத்துவனையில் மு.க.ஸ்டாலின்..!ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை ..!மருத்துவமனை அறிக்கை ..!
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது
திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட முக ஸ்டாலின் தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகிறார்.
இந்த நிலையில் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தது.
இந்நிலையில் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் வலது தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும், இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.