“144 ஆண்டு கழித்து நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழா “வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது..!!!
144 ஆண்டுகளுக்கு பிறகுதாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
குரு பகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது நடக்கும் நிகழ்ச்சியே மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் ஆலய தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மகா புஷ்கரவிழா நடக்கிறது.
இந்நிலையில் விழா நடக்கும் 12 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் ஹோமங்கள், முன்னோர்கள் நினைவு தர்ப்பணம், கோ தானம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படுகிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU