21,08,00,000 பான்கார்டு எண்கள், ஆதாருடன் இணைப்பு…!
தற்போது வரை 21 கோடியே 8 லட்சம் பான்கார்டு எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.ஆதாருடன், பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, வருமான வரித்துறை, அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் தற்போது வரை ஆதாருடன், பான்கார்டு எண்ணை இணைத்துள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இதில், திங்கள் கிழமை வரை, 41 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 969 பான்கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 பான்கார்டு எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU