பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை..!!

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், தலையாமழை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி (49). இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.Image result for நாகப்பட்டினம் தொடரும் விவசாயிகள் தற்கொலை…! கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை பயிர் கருகியதால் கீழையூர் விவசாயிஇவ்வாண்டு, மேட்டூர் அணை நிரம்பிக் காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் வந்து, கடைமடைப் பகுதிக்கும் வந்து, வயல்களில் விளைச்சல் செழிக்கும் என்று எதிர்பார்த்து கூடுதலாக 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயத்தை ஆரம்பித்தார். இதற்காக நிறைய கடன் வாங்கினார். காவிரி நீரெல்லாம், கடலுக்குச் சென்று பாய்ந்ததே தவிர, கடைமடைப் பகுதிக்கு நீர் வராததையும், தன் வயல்கள் கருகிவிடும், வாங்கிய கடனை எப்படி அடைப்பேன் எனத் தவித்தும் விவசாயி ராமமூர்த்தி கலங்கினார்.

இந்நிலையில், 30 நாட்களான பயிர்கள் பூச்சியால் அரிக்கப்பட்டிருந்தன. பயிர்களுக்குப் பூச்சி மருந்தைத் தெளித்தார். பயிர்கள் தண்ணீர் இல்லாததால் மேலும் வாடிக் கருகின. மனம் கருகிப் போன ராமமூர்த்தி, பூச்சி மருந்தினைக் குடித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சரித்திரம் மீண்டும் சுழல்கிறது

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment