ஆதார் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு ..!
ஆதார் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நேற்று வங்கிக்கணக்கு தொடங்க,சிம் வாங்க,பான் எண் இணைக்க ,சிபிஎஸ்இ, நீட் தேர்வுகளுக்கு ஆதார் தேவை இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.மேலும் ரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் தெரிவித்த கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவளித்திருக்கிறது.இந்த தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.