அதிமுகவை தவறாகப் பேசினால் நாக்கை அறுத்துவிடுவேன்..!அமைச்சர் எச்சரிக்கை ..!நான் பேசியிருக்கேன்..!என்னுடைய நாக்கை அறுக்க முடியுமா ..!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சவால்

Default Image

அதிமுக குறித்து விமர்சித்த எனது நாக்கையும் அவர்கள் துண்டிப்பார்களா என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று அதிமுக அரசு சார்பில் இலங்கை அரசுக்கு போரின்போது உதவி செய்ததாகக் கூறி காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக்கு எதிராக தமிழகம்  முழுவதும்  கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றது.

Image result for வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக அரசைப்பற்றி யாராவது தவறாகப் பேசினால் அவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்று ஆவேசமாக பேசினார்.மேலும்  திமுக தான் தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழலை அறிமுகப்படுத்தியது.

நாக்கை அறுத்துவிடுவேன் என்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image result for பொன் ராதாகிருஷ்ணன்

இந்நிலையில்  இதற்கு பாஜக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சு குறித்து கூறுகையில், அதிமுக அரசு குறித்து விமர்சனம் செய்த எனது நாக்கையும் அவர்கள் துண்டிப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்