காலைல மட்டும் சாப்பிட மறந்திராதிங்க…! அப்புறம் என்ன ஆகும்னு தெரியுமா…?
நம்மில் அநேகம் பேர் அலுவலக வேலை, பள்ளிக்கு செல்லுதல் என நமது கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும், நேரம் தவறாமல் செல்ல வேண்டும் என்பதற்காக காலை உணவை சாப்பிடாமல் செல்கிறோம். ஆனால் இதனால் நமக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று உணருவதில்லை. இன்னும் சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என காலை உணவை தவிர்க்கிறார்கள்.
காலை உணவை தவிர்ப்பதால் குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாக வாய்ப்புண்டு. மேலும், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் மராத்தி அதிகரிக்கும், உணவு எதுக்களித்தல், வயிற்று வலி, செரிமான தொந்தரவுகள் உண்டாகும்.