ஐஏஎஸ் தேர்வுக்கு மீனவ பட்டதாரிகளுக்கு வாய்ப்பு….!!!
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவக்கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த மாணவர்களில் 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டி தேர்வுக்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்திட அரசு ஆணை வழங்கியுள்ளது. இதில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் சேர்ந்து பயிற்சி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.