சிம்டாங்காரன் வெளியாகி சாதனைகள் செய்தாலும் ரசிகர்களுக்குள் இருக்கும் வருத்தம்!
திங்களன்று மாலை தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் இருந்து சிம்ட்டாங்காரன் என்ற ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருந்தது. இது வெளியான சில மணி நேரத்தில் தளபதி ரசிகர்களால் பல சாதனைகளை செய்தது.
ஆனாலும் இந்த பாடல் அதிகமாக விஜய் ரசிகர்களால் விரும்பபடவில்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்க்கு பாடலின் வரிகள் புரியாதபடி அமைந்திருந்தன. அதிலும் மியூசிக் இது ரகுமான் இசையா என சந்தேகிக்கும் வகையில் அமைந்திருந்தன.
இதில் சில ரகுமான் ரசிகர்கள், அவர் பாடலை கேட்டால் பிடிக்காது கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று கூறி வருகின்றனர். எது எப்படியோ அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் மற்ற பாடல்கள் புரியும்படியாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்தால் சரி.
DINASUVADU