சிக்கலில் கருணாஸ் ..!பறிபோகும் கருணாஸின் எம்எல்ஏ பதவி..!விதியை மீறிவிட்டார் ..! அமைச்சர் ஜெயக்குமார் பகீர் தகவல்
கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.பின்னர் கொலை முயற்சி பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
நேற்று அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.பின்னர் அந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கருணாஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கருணாஸ் சட்டமன்ற உறுப்பினராக ஏன் நீடிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக சட்டவிதிகளை மீறி பேசக்கூடாது .பல்வேறு சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கருணாஸை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.