தொப்பையை குறைக்க….! இந்த ஜூஸ் குடிங்க….!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய கவலையே தொப்பை தான். இதை குறைக்க உடற்பயிற்சி, கடினமான வேலைகள் மற்றும் இதற்காக வகையான கொழுப்பை குறைக்க கூடிய உணவு வகைகள் என சாப்பிட்டு பார்த்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்டவர்களின் கவலையை போக்க தான் இந்த ஜூஸ். இந்த ஜூஸ் குடித்தால் உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களை கண் கூடாக பார்க்கலாம்.
செய்முறை :
- வெள்ளரிக்காய் -1
- எலுமிச்சைக்காய் -5-7
- புதினா இலைகள் – தேவையான அளவுகள்.
- துருவிய இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 2.5 லிட்டர்
- முதலில் வெள்ளரிக்காயையும், எலுமிச்சைக்காயையும் தனி தனியாக வெட்டி வைத்துக்கொள்ளவும் வேண்டும்.
- பின் 3 எலுமிச்சையை பிழிந்து, புதினாவை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
- பின்பு அதில் இஞ்சி மற்றும் வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காயை போட்டு நன்கு கிளறி அதை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, பின் அந்த ஜூஸை குடிக்க வேண்டும்.
- இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து குடித்து வந்தால் தொப்பை குறைவதை காணலாம். வேண்டுமானால் ஒரு வாரம் கழித்து மீண்டும் இதை செய்து குடிக்கலாம்.