“தினகரன் முதல்வர் பதவிக்கு ஆசைபட்டார்” அமைச்சர் பரபரப்பு பேச்சு..!!
பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த தினம் மற்றும் இலங்கை தமிழர்களை
இனப் படுகொலை செய்ய உதவிய காங்கிரஸ் மற்றும் திமுக மத்திய கூட்டணி அரசைக் கண்டித்து கண்டன பொது கூட்டம் திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு சீனிவாசன் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் TTV.தினகரன் முதல்வர் பதவி புடிக்க ஆசைப்பட்டார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர் ,
லண்டன் காபிபோசா வழக்கில் கருணாநிதியிடம் பிச்சையெடுத்து தப்பித்துக்கொண்டு அம்மாவை பொய் வழக்கில் மாட்டிவிட்டு காட்டிக்கொடுத்த துரோகி தான் இந்த தினகரன். அம்மாவை கொலை செய்துவிட்டு அம்மாவை இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.
TTV தினகரனின் மாமா திவாகரன் ஓரு கட்சி ஆட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் தம்பி பாஸ்கரன் ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார்.திவாகரன் மகன் ஓரு கட்சி.தினகரனின் மைத்துனர் ஓரு கட்சி. ஆக அவர்கள் குடும்பத்தில் மட்டும் 10 கட்சிகள் உள்ளது. இதுவரை கொள்ளையடித்த பணத்தை செலவழித்து எப்படியாவது ஆட்சியை மீட்டு விடலாம் என TTV.தினகரன் நினைக்கிறார்கள்.
இங்கு பணம் இருப்பவர்கள் எல்லாம் முதலமைச்சர்களாக. பிரதமர்களாக ஜனாதிபதியாக வந்துவிடலாம் என்றால் டி.வி.எஸ். அய்யங்கார். டெல்லியில் இருக்கக்கூடிய ரிலையன்ஸ் அம்பானி , டாட்டா பிர்லா ஆகியோர் இந்தியாவின் பிரதமர்களாக ஜனாதிபதியாக வந்திருக்க முடியும் ஆனால் அவர்களால் வர முடியவில்லை.காரணம் பணம் இருப்பவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது. மக்களுக்காக உழைப்பவர்களால் தான் முதலமைச்சர் வர முடியும்.மக்களுக்கு உழைத்ததால் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 3 முறை முதலமைச்சர். புரட்சித்தலைவி அம்மா 6 முறை முதலமைச்சர்.37 எம்.பிக்கள் வந்துள்ளார்கள்.அம்மா நம்மிடம் ஆட்சியை கொடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
DINASUVADU