ஆசிய கோப்பை 2018:தவான்,ரோகித் அதிரடி சதம் …!இந்திய 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி …!
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது.
இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மாலிக் 78 ரன்கள்,சர்ப்ராஸ் 44 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா ,சாகல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.இதன் பின்னர் 238 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி 39.3 ஒவர்களிள் ஒரு விக்கெட்டை இழந்து 238 வெற்றி இலக்கை எட்டியது.இதனால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
.களத்தில் ரோகித் 111 ரன்கள்,ராயுடு 12 ரன்களுடன் இருந்தனர்.அதேபோல் தவான் 114 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.