ஆசிய கோப்பை 2018:அதிரடி சதம் அடித்த தவான் …!15-வது சதம் அடித்து சாதனை ..!
இந்திய அணி வீரர் தவான் சதம் அடித்துள்ளார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.
இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மாலிக் 78 ரன்கள்,சர்ப்ராஸ் 44 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா ,சாகல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.இதன் பின்னர் 238 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி 32.3 ஒவர்களின் முடிவில் 198 ரன்கள் அடித்துள்ளது.இந்நிலையில் தவான் சதம் அடித்துள்ளார்.இது இவருக்கு 15 வது சதம் ஆகும். 95 பந்துகளில் சதம் அடித்துள்ளார் .களத்தில் ரோகித் 94 ரன்கள்,தவான் 103 ரன்களுடன் உள்ளனர்.