“இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது” முன்னாள் மத்திய அமைச்சர் சாடல்..!!
புதுடெல்லி, செப்.23- வாராக் கடன்விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு முன்னெடுத்து வரும் தவறான நடவடிக் கைகள் காரணமாக வங்கி கள் தற்போது போதிய பணமின்றி தவித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
நாட்டில் வறுமையை பெருமளவு ஒழித்ததில் அதிக பங்கு காங்கிரஸையே சாரும் என்றும் அதற்கு பா.ஜ.க. உரிமை கோருவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப் பட்ட நிதிச்சூழல் நிலைத் தன்மை தொடர்பான அறிக்கையில் வாராக் கடன் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறிப் பிடப்பட்டிருந்தன. முக்கியமாக நிகழ்நிதியாண்டில் வாராக்கடன் விகிதம் தற்போதைய அளவைக் காட்டிலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வங்கிகளின் கடன் சுமை உயரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம், மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் தெரிவித் திருப்பதாவது: மத்திய பா.ஜ.க. அரசு முன்னெடுத்து வரும் தவறான நடவடிக்கைகளால் வங்கிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. வங்கிகளைச் சுற்றி சந்தேகங்களும், பழிவாங்கும் படலங்களும் நிறைந்திருக்கும் சூழலில், அதில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஓய்வு பெறும் நாளினை எதிர்நோக்கியே காத்திருக்கின்றனர். மாறாக மக்களுக்கு கடன் அளிக்கும் சூழலில் எந்த வங்கியும் இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, ஏற்று மதிக்காக வழங்கப்பட்ட கடன் தொகையின் மதிப்பு ரூ.39,000 கோடியாக இருந்தது. அது நிக ழாண்டு ஜூன் மாதத்தில் ரூ.22,300 கோடியாக குறைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏற்றுமதியை ஊக்குவிக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக இன்னமும் மத்திய அரசு கூறிக் கொண்டிருப்பது நகை முரண்.இது ஒருபுறமிருக்க, நாட்டில் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து மீட் டெடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க.வின் விசுவாசிகள் பிரகடனப்படுத்தி வருகின்றனர். கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் அத்தனை கோடி பேரின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டது. அதில் 8 ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலம் என்பதை வசதியாக மறந்துவிட்டு பா.ஜ.க.வினர் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என்று அந்தப் பதிவுகளில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
DINASUVADU