கருணாஸ் கைது…!தமிழக அரசு நடுநிலையாக இருக்கவேண்டும்..! தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்தது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நேற்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.பின்னர் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்ததைக் கண்டிக்கிறேன். தமிழக அரசு நடுநிலையாக இருக்கவேண்டும். தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.