“பொய் வழக்கு போட்டு வழக்கு எண் 18/9 சினிமா பாணியில் மாட்டிய காவல்”அறைந்த “சென்னை உயர் நீதிமன்றம்” உண்மை உடைத்து 3மாத காலக்கேடு..!!
குற்றவாளி எனக் கருதி விதிக்கபட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ராஜேந்திரன்-மீனாட்சியின் இவர்களின் 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அதே காம்பவுண்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான ஐயப்பன் மீது கடந்த 2009-ல் வழக்குப் பதியப்பட்டது.ஆனால் சிறுமியின் குடும்பம் தம்பதி ராஜேந்திரன் மீனாட்சி சென்னை குமரன் நகர் பகுதியில் காட்டுராஜா என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது .
இதில் சிறுமி தாய் மீனாட்சிக்கு பார்வை குறைபாடு உள்ள நிலையில் வீட்டை காலி செய்வதில் மீனாட்சிக்கும் காட்டுராஜாவின் மனைவிக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தாக காம்பவுண்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான ஐயப்பன் மீது கடந்த 2009-ல் வழக்குப் பதியப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதி மன்றம் கடந்த மே மாதம் ஐயப் பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கூலித்தொழிலாளியான ஐயப்பன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் மனுவில்,வீட்டின் உரிமையாளரான காட்டுராஜாதான் உண்மையான குற்றவாளி. ஆனால் இந்த வழக்கில் போலீஸார் அவரை தப்பிக்க வைத்துவிட்டு, அப்பாவியான என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். மற்றும் எனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகி யோர் அடங்கிய அமர்வு அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் போலீஸார் இயந்திரத் தனமாக செயல்பட்டுள்ளனர். ‘வழக்கு எண் 18/9’ என்ற சினிமா பாணியில் குற்றவாளியை சாட்சியாக்கிவிட்டு, சாட்சியாக சேர்க்கப் பட்டவரை குற்றவாளியாக்கி ஆயுள் தண்டனையையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதற்காக சம்பந்தப்பட்ட குமரன் நகர் போலீஸாருக்கும் விசாரணை அதிகாரிக்கும் இந்த நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது என்று காவல் அதிகரிகளை எச்சரித்தது.
மனுதாரரான ஐயப்பனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உடனே ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது உத்தரவிட்டது.மேலும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதேபோல இந்த வழக்கில் குற்றத்தை செய்து விட்டு தப்பிய உண்மையான குற்றவாளியான காட்டுராஜா மீதான வழக்கை மகளிர் நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதில் பாதிக்கப்பட்ட சிறுமி 3 மாதங் களுக்குப் பிறகே இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்தார்.அதில் வீட்டு உரிமையாளரான காட்டுராஜாதான் தன்னை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெளிவாகக் குறிப்பிட்டும். அந்த வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றமும் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியத்துடன் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
குற்றத்தை தடுத்து தடுப்பணையாக இருக்க வேண்டிய காவலே குற்றத்திற்கு துணையாக இருந்தது மட்டுமல்லாமல் குற்றத்தை மறைத்து உள்ளது நிரபராதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாட சிறுமி என்று பாராமல் குற்றம் செய்த குற்றவாளி சொகுசு வாழ்க்கை அனுபவிக்க வழிவகை செய்த காவலின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU