ரூபாய் 50,000 கடன் வாங்கிய நபரிடம் 16 ஆண்டுகளாக கொடுமையை அன்பவித்த தமிழ் பெண்..!!
தமிழகத்தைச் சேர்ந்த ஜானகி (34) என்னும் பெண், மாண்டியா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் 16 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. நில உரிமையாளரும், மாத்தூரில் முக்கிய அரசியல் பிரமுகருமான நாகேஷ் என்பவரிடம் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். 50,000 கடனை அடைக்க முடியாமல் 16 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல், கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாகேஷிடம் இருந்து தப்பித்து வேறு எங்காவது போய் வாழலாம் என்னும் முடிவுக்கு வந்தார் ஜானகி. குழந்தைகளை அழைத்துக்கொண்டு தப்பித்தும் சென்றார். கோப்பா ஹோப்லி என்னும் கிராமத்துக்குச் சென்று தலைமறைவாகினார். ஜானகியை நாகேஷ் எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டார். தன் அடியாட்களுடன் ஜானகி வசிக்கும் இடத்துக்குச் சென்ற நாகேஷ், அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி இழுத்துச் சென்றுள்ளார். இந்தக் காட்சியை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர, தலித் அமைப்புகள் ஜானகிக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கின. நாகேஷ் ஜானகியை அடித்து, தரதரவென இழுத்துச் சென்று காருக்குள் ஏற்றும் அந்த வீடியோ தேசியளவில் அதிர்வலைகளை எழுப்பின. தலித் அமைப்புகள் நாகேஷுக்கு எதிராகப் போராட்டம் நடத்தின. இந்தச் சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஜானகியை மீட்டு, நாகேஷை கைது செய்தனர்.
ஜானகி மற்றும் அவரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் இலவச படிப்பும், ஜானகி மற்றும் அவரின் கணவருக்கு வேலைவாய்ப்பும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
DINASUVADU