BREAKING NEWS:நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாறும் நாகர்கோவில்..! முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு
நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இன்று நாகர்கோவிலில் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்தார். அதன் பின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமியின் பார்வைக்கு கொண்டு சென்றேன். நாகர்கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் சபாநாயகர் தனபால் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.இதில் முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், எல்லைகள் மறுசீரமைப்பு பணி முடிந்ததும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.மேலும் ரூ.120 கோடி மதிப்பில் விவேகானந்தர் பாறைக்கு பாலம் கட்டப்படும்.ஒகி புயலின் போது மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மீனவர்கள், பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.