மைசூருவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தசரா திருவிழா!

Default Image

407-வது ஆண்டாக இந்த ஆண்டு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது தசரா விழா.
தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும் கொண்டாட்டங்களும் நடைபெற்ற மைசூருவில் இறுதி நாளான பத்தாம் நாள் விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. நேற்று இவ்விழா வெகுவிமர்சையாக மைசூரு அரண்மனையில் கொண்டாடப்பட்டது.
கர்நாடக அரசு மைசூர் தசரா விழாவினை வெகு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. அரசு விழாவாக மன்னர்கள் குடும்பத்தின் முன்னிலையில் இது நடைபெறுகிற்றது. அரசுப்படைகளின் அணிவகுப்பு, அரசின் பெருமைகளைச் சொல்லும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு என உலகமே வியக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. சாமுண்டீஸ்வரியின் பிரம்மாண்ட ஊர்வலத்துடன் இவ்விழா நேற்று நிறைவுபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்