திருட்டு பையன் சார் இந்த ஆரவ்…கடைசில பிக்பாஸ் டைட்டிலையும் win பண்ணிட்டானே…!
ஓவியாவின் மனதை மட்டுமல்ல, மக்களின் மனதையும் கவர்ந்து பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளார் காதல் மன்னன் ஆரவ். 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் போட்டியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
100 நாட்களை பிக்பாஸ் வீட்டில் வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களில் மக்களின் மனங்கவர்ந்தவருக்கு பிக்பாஸ் டைட்டில் வழங்கப்படும் என்பதை அறிந்து 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர்.
ஆனால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற இறுதியாக 4 போட்டியாளர்கள் மட்டும் 100-வது நாளில் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
கணேஷ், ஹரீஷ், சினேகன், ஆரவ் ஆகிய நால்வரும் 100வது நாள் வரை இருந்தனர். இதையடுத்து இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
கணேஷும் ஹரீஷும் வெளியேற்றப்பட ஆரவுக்கும் சினேகனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் சினேகனை விட அதிகமான ரசிகர்களின் வாக்குகளைப் பெற்று ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஓவியாவின் மனதை கவர்ந்த ஆரவ், தமிழக மக்களின் மனதையும் கவர்ந்துள்ளார் என்பது அவர் பிக்பாஸ் டைட்டிலை வென்றதன் மூலம் உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது மக்களிடம் அறிமுகமில்லாத நபர்களில் ஒருவராக வந்தவர் ஆரவ்.
ஆனால் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து மக்களின் பேராதரவுடன் பிக்பாஸ் போட்டியில் வென்றுள்ளார் ஆரவ்.