“புகார் கூறிய பேடிஎம்”திருத்தியமைத்த கூகுள் பே..!!என்ன புகார்..??
இந்திய தேசிய நிதி செலுத்துதல் கழகத்தில் பேடிஎம் நிறுவனம் புகாரளித்ததை அடுத்து கூகுள் பே நிறுவனம் பயனாளர் தகவல் பாதுகாப்புக்கு ஏற்ப மாற்றங்களை செய்துள்ளது.
இந்தியாவில் முன்னணி பணப்பரிமாற்ற செயலிகளில் ஒன்றான பேடிஎம், ஏற்கெனவே வாட்ஸ் ஆப் பேமென்ட்ஸ் வசதி இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கூகுள் பே-வில் பயனாளர்களின் தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லை என இந்திய தேசிய நிதி செலுத்துதல் கழகத்தில் புகாரளித்தது.
கூகுள் பே பாதுகாப்பு விதிகளில், பயனாளர் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, சேமித்து, பயன்படுத்தி, வெளியிட கூகுள் பே-க்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாதுகாப்பு விதிகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதில் வெளியிட என்ற வார்த்தையை மட்டும் வியாழனன்று கூகுள் பே நிறுவனம் நீக்கியுள்ளது.
இது பேடிஎம் நிறுவனம் அளித்த புகாரால் மாற்றப்பட்டதா? அல்லது, அந்நிறுவனத்தின் புகாரடிப்படையில் இந்திய தேசிய நிதி செலுத்துதல் கழகத்தின் அறிவுறுத்தலின்படி மாற்றப்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை.
DINASUVADU