நான் தலைமறைவாக இல்லை…!என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது தெரியாது..!ஹெச்.ராஜா

Default Image

நான் தலைமறைவாக இல்லை என்று  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.

இதனால்  திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

 

பின்னர் அவர் திண்டுக்கல்லில் உள்ள இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதூர்த்தி பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது பேசிய இந்துமுன்னணிப் பிரமுகர் வினோத் என்பவர் நாளிதழ் செய்தியைக் காட்டி, ”ஹெச்.ராஜா தலைமறைவாம். பேப்பரில் போட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எதாவது தெரியுதா? சிங்கம் இங்கேதான் உட்கார்ந்திருக்கு, முடிந்தால் கைது செய்து பார்” என்று சவால் விடுத்தார்.

அதேபோல் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய  2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது என்று காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  நான் தலைமறைவாக இல்லை.தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது தெரியாது.மேலும் தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் 82% கொள்ளையடித்துள்ளனர்.சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப்படுத்தினர், ஆனால் தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை ?என்றும்  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024