கடந்த வாரத்தில் மட்டும் 10 உயிர்களை காவு வாங்கிய வைகை ஆறு…!!!
தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த செல்வபூபதி என்பவர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைகை ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் அளிக்கின்றனர். வைகை ஆற்றில் இறங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.