ஆசிய கோப்பை 2018:இந்திய அணி பந்துவீச்சு …!ஜடேஜாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு …!
வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஆசிய கோப்பையில் சூப்பர்-4 சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஷ்தான் அணிகள் மோதுகின்றது.
இந்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேச இடையேயான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா (கேப்டன் ),தவான் (துணை கேப்டன் ),ராயுடு,கேதார் ஜாதவ்,தோனி,தினேஷ் ,குல்தீப்,சாஹல்,பூம்ரா ஜடேஜா,புவனேஸ்வர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .
இதையடுத்து இந்திய அணி தனது பந்துவீச்சை தொடங்க உள்ளது.