ஏலம் விடப்படும் 7,877 வாகனங்கள்..!!

Default Image

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,877 வாகனங்கள் செப்டம்பர் 27-ஆம் தேதி மின்னணு முறையில் ஏலம் விடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Image result for 7,877 வாகனங்கள்

மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7,877 இரு, நான்கு சக்கர வாகனங்கள் காவல் துறை உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் எந்த வழக்குகளுடனும் சம்பந்தப்படவில்லை என்றும், இவற்றின் மீது எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் நிலுவையில் இல்லை என்றும் காவல் துறை மூலம் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையரை 15 நாள்களுக்குள் அணுகுமாறும், 15 நாள்களுக்குப் பின் உரிமை கோராத வாகனங்கள் ஏலம் விடப்படும் என பத்திரிகைகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வாகனங்கள் குறித்த விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராததால் அவற்றை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து ள்ளது. அதன்படி, மத்திய அரசின் நிறுவனமான mstc(metal scrap trading corporation ltd) மூலம் செப்டம்பர் 27-ஆம் தேதி மின்னணு முறையில் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் mstc நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், ஏலம் குறித்த விவரங்களை www.mstcecommerce.com அல்லது www.mstcindia.co.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)