ஹர்திக் பாண்டியா நலமுடன் உள்ளார்- கிரிக்கெட் வாரியம் விளக்கம்…
புதுடெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். பந்து வீசும் போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மருத்துவ குழு அவரை பரிசோதித்த பிறகு ஸ்டிரெச்சரில் தூக்கி கொண்டு செல்லப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. செய்தி தொடர்பாளர் கூறும் போது, “ஹர்திக் பாண்டியாவின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்றார்.
ஆசிய கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடுமையான வெயில் நிலவுகிறது. இது போன்ற சமயங்களில் வீரர்கள் அதிகப்படியான நீர் ஆகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் விளையாடுவதால் வீரர்களின் உடலில் இருந்து நீர் சத்து வெளியேறி விடும். இதனால் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். பாண்டியாவுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை தான் ஏற்பட்டது. விரைவில் சரியாகிவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU