அமைச்சர் தங்கமணிக்கு 1 வாரம் கெடு …!என் மீது வழக்கு போட  வேண்டும் ..!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி என் மீது வழக்கு போட  வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று  திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை மண்டல உதவி தணிக்கை அதிகாரியின் அறிக்கையில்  கூறுகையில், காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என்று  மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்து விட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.இதோ, ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன்.அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும்  ஆடிட் அதிகாரி “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அறிக்கை கொடுத்த பிறகும், அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என மூடி மறைக்க முயற்சிக்கிறார்.உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் ரூ.9.17 கோடி மதிப்புள்ள மின்சாரம் பெறப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது.உங்களுக்கு தைரியமிருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

Image result for mk stalin minister thangamani

இந்நிலையில் இன்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.அவர் கூறுகையில்,மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் கெடு. ஒரு வாரத்தில் என் மீது ,மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வழக்கு போட  வேண்டும் .மின்துறை அமைச்சர் தங்கமணி என் மீது  வழக்கு போடவில்லை என்றால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ வரை கொண்டுசெல்வோம்.அதேபோல் காற்றாலை மின்சார கொள்முதல் ஊழல் புகாரில் அமைச்சர் தங்கமணி தெளிவாக பதிலளிக்கவில்லை.மேலும் குட்கா விவகாரத்தில் வழக்கு தொடர்வதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை வழக்கு தொடரவில்லை  என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்