புழல் சிறையில் சோதனை….! பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்….!!!
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக வெளியான புகைப்படங்களை தொடர்ந்து, கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட சிறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. புழல் சிறையில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 18டிவி., க்கள், எப்.எம்., ரேடியோக்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் புழல் சிறையில் இன்றும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. கைதிகள் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் 4 மொபைல் பொங்கல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐயப்பன், குணசேகரன் அறையில் இருந்து 4 சிம் கார்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து மொபைல் போன் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.