அஜித்தை பிடிக்காதவர்களுக்கு நடிகர் ரியோ என்ன செய்திருக்காருனு பாருங்களேன்…!!!
அஜித் – விஜய் எப்போதும் தங்களை நண்பர்களாக காட்டி கொள்வார்கள். ஆனால் அவர்களது ரசிகர்கள் பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை.
ஒவ்வொரு முறையும் இவர்களது பட விஷயங்கள் வரும்போது டுவிட்டரில் அதிக சண்டை வரும். உச்சகட்டமான சண்டைகள் நடந்து பெரிய பிரச்சனைகள் நடந்திருக்கிறது. அது வேறு கதை. அப்படி அஜிஜித்தின் தீவிர ரசிகரான தொகுப்பாளரும், நடிகருமான ரியோ ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அஜித்தை பிடிக்கும், எப்படி ரசிகன் ஆனேன் என்பது சொல்ல தெரியவில்லை. அவரின் புகைப்படங்களுக்கு பால் ஊற்றுவது போன்ற வேலைகள் செய்தது கிடையாது. ஆனால் முதல் நாளே அவரது படத்தை பார்த்து விடுவேன்.
அது மட்டுமில்லாமல் அஜித்தை ரசிக்காத நண்பர்கள் இருந்தால் அவர்களை வம்பிழுத்து முதல் நாள் கூட்டிக்கொண்டு போவேன் என பேசியுள்ளார்.