பாலியல் பாதிரியாரிடம் 7 மணிநேரம் 104 கேள்விகள் விசாரணை..!!
கேரள மாநிலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரைப் பாதிரியார் ஃப்ராங்கோ முலக்கால் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு எழுந்ததும் பாதிரியார் , தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தது. மேலும் ஃப்ராங்கோ முலக்காலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டங்கள் நடைபெற்றது. ஃப்ராங்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, வாடிகன் நகரில் இருக்கும் போப், பிராங்கோ முலக்காலை ஜலந்தர் டியோஸிஸ் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் பாதிரியார் ஃப்ராங்கோ முலக்கால். இது தொடர்பான விசாரணை செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து நேற்று திரிபுனித்துறா குற்றவியல் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரான பாதிரியார் ஃப்ராங்கோ முலக்காலிடம் காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை மாலை வரை தொடர்ந்தது. இன்று காலை 11 மணிக்கு அவர் மீண்டும் ஆஜராகவுள்ளார்.
இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோட்டயம் எஸ்.பி ஹரிஷங்கர், “முதல்கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. நாளை அவர் மீண்டும் ஆஜராக வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறார்” என்றார். குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள சில ஊடகங்களில் அவரிடம் சுமார் 104 கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த எஸ்.பி. “நாங்கள் பல கேள்விகள் கேட்டோம். அது 104 ஆக இருக்கலாம். அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். நாங்கள் விசாரணை செய்யும் அறையில் யார் கேள்விகளை எண்ணினார்கள் என்று தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக்கொண்டே இருப்பதால் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது, என்ன கேள்விகள் கேட்கப்பட்டது போன்ற தகவல்கள் தற்போது சொல்ல முடியாது” என்றார். இந்த விசாரணை மேலும் சில நாள்கள் தொடரும் என்றே கூறப்படுகிறது.இந்த தகவலை தெரிந்த அடுத்த வினாடியே நெட்டிசன்கள் பாலியல் பாதிரியாரிடம் 7 மணிநேரம் 104 கேள்விகள் என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
DINASUVADU