“வாரிசு அடிப்படையில் வந்த முக.ஸ்டாலின் என்ன செய்தார்” அமைச்சர் விளாசல்..!!

Default Image

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்ன செய்தார்? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினர்…

முதல்வர், துணை முதல்வருக்கு துணையாக இருப்பதால் எங்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை  பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திமுகவை பேரறிஞர் அண்ணா உருவாக்கி இந்தி திணிப்பை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தினார்.இப்பொழுது வாரிசு என்ற அடிப்படையில் திமுகவில் ஒருவர் தலைவராகியுள்ளார். திமுகவை உருவாக்கியவர் அண்ணா. கருணாநிதி அல்ல. ஸ்டாலினின் எண்ணம் ஆட்சியை கலைக்க வேண்டும், முதல்வராக வேண்டும். ஆட்சியை கலைப்பதற்காக ஸ்டாலின் சட்டையை கிழித்து சட்டமன்றத்தில் நடத்திய நாடகத்தை மறக்க முடியுமா? இந்த ஆட்சி 10 நாளில், 1 மாதத்தில், 6 மாதத்தில் கலைந்து விடும் என்று கனவு கண்டு வரும் ஸ்டாலினின் கனவு ஒரு போதும் நடக்காது.

Image result for முதல்வர், துணை முதல்வருக்கு

தொண்டர்கள் தான் கழகத்தை நடத்தி வருகிறார்கள். இந்த இயக்கம் நான் இருந்தாலும், இல்லா விட்டாலும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும்.அதான் சாதாரண கிளை செயலாளராக இருந்து எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகியுள்ளார். உங்களை போல வாரிசு அடிப் படையில் வரவில்லை. அம்மா வளர்த்த கட்சியில் குறுக்குவழியில் பதவிக்கு வர நினைத்த டிடிவி.தினகரனை வெளியே அனுப்பியவர்கள் நாங்கள். முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்பது தெரிந்து எங்கள் மேல் பொய்யான குற்றச்சாட்டை முக.ஸ்டாலின் கூறுகிறார்.

Image result for முக.ஸ்டாலின்

முக.ஸ்டாலின் என் மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அமைச்சர் பதவியை மட்டுமல்ல, புரட்சித்தலைவி தந்த பதவியிலிருந்தும் விலகி விடுகிறேன். நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், கட்சிப்பதவியையும் விட்டு விலக முடியுமா?ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக. உலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஸ்பெக்டரம் ஊழலை மறந்து விட்டீர்களா? 5 தடவை ஆட்சியில் இருந்த நீங்கள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்.தமிழகத்தில்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது முக.ஸ்டாலின் என்ன செய்தார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்