“பிள்ளையார் வைக்க தடை” தமுஎகச வலியுறுத்தல்..!!

Default Image

பிள்ளையார் சிலையை பொது இடத்தில் வைக்க தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருவண்ணாமலை ,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதலாவது மாநிலக்குழுக்கூட்டம் 2018 செப் 15,16 தேதிகளில் திருவண்ணாமலையில்
நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமுஎகச மாநிலத்தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

Image result for தமுஎகச வலியுறுத்தல்

1. பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடை:
இறை நம்பிக்கையும் வழிபாட்டுணர்வும் குடிமக்களின் தனிப்பட்ட தேர்வு. விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதும் கூட இவ்வகையானதே. ஆனால், இப்போது விநாயகர் சதுர்த்தி என்பது பிள்ளையார் சிலைகளை தத்தமது வீடுகளில் வைத்து வணங்கிவிட்டு நீர்நிலைகளில் கொண்டுபோய் கரைத்து விடக்கூடிய பக்தர்களின் தனிப்பட்ட விவகாரமல்ல. அது மக்களை மதரீதியாக பாகுபடுத்தவும், மதவாத வெறியேற்றவும், வெறுப்பரசியலை கிளறிவிட்டு சிறுபான்மையர் மீது வன்முறைகளை நிகழ்த்துவதற்குமான சங் பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ளது. சங் பரிவார அமைப்புகள் பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை பொது இடங்களில் பெரும் முதலீட்டில் பிரம்மாண்டமாய் பிள்ளையார் சிலைகளை நிறுவுகின்றன.

Image result for தமுஎகச வலியுறுத்தல்

இதனால் போக்குவரத்தில் மாற்றம், மின்சார நிறுத்தம், சோதனைக் கெடுபிடிகள் என மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நச்சுத்தன்மையுள்ள வேதிக்கலவைகளால் செய்யப்படும் இந்தச் சிலைகளைக் கரைப்பதால் நீர்நிலைகளும் மாசடைகின்றன. சிலை வைப்பு, பாதுகாப்பு, வழிபாடு, கரைப்பு ஊர்வலம் என இதனோடு தொடர்புடைய வேலைகளுக்காக திரட்டப்படும் சிறார்களும் இளைஞர்களும் மதவெறி நஞ்சேறிய சங்பரிவார வன்முறையாளர்களாக சீரழிக்கப்படுகின்றனர். இவர்களால் சிறுபான்மைச் சமூகத்தவரின் உயிருக்கும் உடைமைக்கும் பொது அமைதிக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
சங் பரிவாரத்தினரின் இத்தகைய சட்டவிரோத சமூகவிரோதச் செயல்களுக்கு, பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, பொது இடங்களில் பிள்ளையார் சிலை வைப்பதை அரசு தடை செய்து, பிள்ளையார் வழிபாட்டை அவரவரது தனிப்பட்ட நடவடிக்கையாக அறிவிக்க வேண்டுமென தமுஎ தமிழக அரசை தமுஎகச மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்