ரூ.457 கோடி இழப்பீடு: இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!!
இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என இழப்பீடு கோரியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெறவில்லை.
இந்நிலையில், ஒப்பந்ததின்படி தங்களுடன் இரண்டு உள்நாட்டு தொடர்களில் விளையாட மறுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.457 கோடியை இழப்பீட்டாக தர வேண்டும் என் பாகிஸ்தான் கோரியுள்ளது.
மேலும், இது குறித்து ஐசிசி-யிடம் முறையிட உள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுடன் நேரடி போட்டி தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.