“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

மறைந்த விஜயகாந்த் பெயரை சென்னை 100 அடி சாலைக்கு சூட்டவேண்டும். அவருக்கு பரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என தேமுதிக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Premalatha Vijayakanth

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அதற்கு முன்னதாகவே, கட்சியின் இளைஞரணி செயலாளராக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் நியமனம் செய்யப்பட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதனை தொடர்ந்து தேமுதிக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரை சென்னையில் உள்ள 100 அடி சாலைக்கு சூட்ட வேண்டும் என்ற தீர்மானமும், விஜயகாந்திற்கு பாரத் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

அடுத்து, தேமுதிக கட்சியின் மாநாடு கடலூரில் வரும் ஜனவரி 9, 2026-ல் நடைபெறும் என்றும், தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்றும் கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவைத்தலைவராக V.இளங்கோவன் MBBS என புதிய நிர்வாகிகள் இந்த செயற்குழு கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi
Vijaya prabhakaran - DMDK