Live : கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து முதல்… பஹல்காம் தாக்குதல் நடவடிக்கை வரை…
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கை முதல் கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து வரை பல்வேறு தகவல்களை காணலாம்.

சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கைகளுக்காக முழுசுதந்திரம் அளித்திருப்பதாக பிரதமர் மோடி பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா மைய பகுதியில் உள்ள ரிதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் ஹோட்டலில் இருந்து 14 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்த விசாரணையை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025