இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!
சென்னை சேப்பாக்கத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இது மட்டுமல்லாமல், சென்னை அணி சொந்த மண்ணில் ஒரு முறை மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது. மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப், பிளேஆஃப் செல்ல முயற்சிக்கும். எனவே, இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
ஐபிஎல்லில் இதுவரை 31முறை பஞ்சாப் vs சிஎஸ்கே நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 வெற்றிகளுடன் சற்று முன்னிலை வகிக்கிறது, பஞ்சாப் கிங்ஸ் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இனி வரும் போட்டி குறித்து பேசிய சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி,” மீதம் உள்ள போட்டிகளை வெல்வதே முதல் இலக்கு. இளம்வீரர்களை கண்டறிவதற்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டோம். அடுத்த சீசனுக்கு சிறப்பாகத் தயாராக இருக்க, இந்த இளம் வீரர்களை அவர்களின் உள்நாட்டு ஆட்டங்களிலும் உரிமையாளர் தொடர்ந்து கண்காணிப்பார் என்று ஹஸ்ஸி மேலும் கூறினார்.
இந்த இரண்டரை மாதங்களாக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மட்டுமல்ல, இந்த ஆண்டு முழுவதும் அவர்களுடன் தொடர்புகொண்டு பணியாற்றுவதும், அவர்கள் எப்படிப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பதும், குறிப்பாக அந்த அழுத்த சூழ்நிலைகளில், அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதும் ஆகும்” என்று கூறியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025