தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை தனியார் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி சிகிசை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

4 year old child died

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4 வயது பெண் குழந்தை பயின்று வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த குழந்தை, தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி ஆருத்ரா தவறி விழுந்துள்ளார் எனத் தெரிகிறது.

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமியை உடனடியாக மீட்டு பள்ளி நிர்வாகத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற சோகமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சிறுமியின் உயிரிழப்பை அடுத்து தனியார் மழலையர் பள்ளி தாளாளர் திவ்யா என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்