தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். மனோ தங்கராஜுக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என விரைவில் அறிவிக்கப்படும்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மூத்த தலைவரான பொன்முடி மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கட்சியில் மற்ற தலைவர்களுக்கான வார்னிங் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுவெளியில் கவனமாகப் பேசுங்கள் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இது 2021இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆறாவது அமைச்சரவை மாற்றமாகும். இந்த மாற்றங்கள் நிர்வாக மேம்பாடு, கட்சியின் அரசியல் உத்திகள் மற்றும் எதிர்கால தேர்தல்களுக்குத் தயாராகும் முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025