“பாஜகவை கண்டு அஞ்சி நடுங்கும் அதிமுக”இரா.முத்தரசன் கண்டனம்..!!
எச்.ராஜா காவல்துறையை கண்டித்து பேசியது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பாஜகவினரை கண்டு அஞ்சி நடுங்கும் எடப்பாடி அரசு என்று கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பாஜக-வின் தேசியச் செயலாளர் எனக் கூறப்படும் எச்.ராஜா கொடுத்திடும் தேதியில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகின்றது. அவர் செல்லும் ஊர்கள் எல்லாம் இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் வாழும் ஊர்களாக தேர்ந்தெடுத்து அங்கு சென்று, அவரது வன்மமான பேச்சு மூலமாக வன்முறை வெடிக்கின்றது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுக்காவில் 144 தடை உத்தரவு போடக் கூடிய அளவிற்கு வன்முறை வெடித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் வீட்டு பெண்களை விலைபேசி விற்பவர்கள் என்று மோசமாக பேசியுள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து வன்முறையைத் தூண்டும் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வரும் ராஜாவை தமிழ்நாடு அரசு கைது செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே போல பாஜக ஒழிக என்று கூறியதற்காக மாணவி சோபியா கைது உடனே கைது செய்யப்பட்டார்.துண்டு பிரசுரம் வழங்கினார் என்பதற்காக சேலம் வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகவும், ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவும் திருமுருகன் காந்தி மீது ஏராளமான வழக்குகள், திரைப்பட இயக்குநர் கௌதமன் மீது வழக்கு, இப்படி பலரின் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வரும் தமிழ்நாடு அரசு, பாஜகவினரை கண்டு அஞ்சி நடுங்குவது ஏன்? என்று வினா எழுப்பியுள்ளார்.
சென்னை சைதாபேட்டையில் தமிழிசை முன்பாக, பெட்ரோல் விலை உயர்வுகுறித்து கேட்ட ஆட்டோ தொழிலாளி கதிர் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார்.தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு, சிலை சேதப்படுத்துதல் போன்ற வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இத்தகைய அருவருக்கத் தக்க செயலில் தொடர்ந்து ஈடுபட்டு, வன்முறையை தூண்டி சமூக பதற்றத்தை உருவாக்குவதில் முதல் நபராக விளங்கி வரும் எச்.ராஜா-வை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.என்று அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.
DINASUVADU