காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

பாகிஸ்தான் துணைப் பிரதமர் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களை "சுதந்திரப் போராளிகள்" என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

Pak Deputy PM

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது மட்டும் இல்லாமல், விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் பதிலடி கொடுத்தது. கூடுதலாக பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த சூழலில் இன்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல்களின் பேரில் பாஸிபோரா பகுதியின் குல்னரின் என்ற இடத்தில் ராணுவம் தேடல் நடவடிக்கையைத் நடத்தி வருகிறது.

இதனிடையே, நேற்றைய தினம் பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) அதிகாரிகளுடன் பேசிய பின்பு, இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர், ”ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதல்களை நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம், அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது.

பாகிஸ்தானை மறைமுகமாகக் குற்றம் சாட்டுவதன் மூலம், உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் உள்நாட்டு அரசியலில் அவர்கள் தோல்வியடைந்ததை மறைக்க அவர்கள் முயற்சிப்பதாக நான் நம்புகிறேன்,” என்று கூறினார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது குறித்து பேசிய அவர்,”பாகிஸ்தானில் 240 மில்லியன் மக்களுக்கு தண்ணீர் தேவை… அதை நீங்கள் நிறுத்த முடியாது.

இது ஒரு போர் நடவடிக்கைக்கு சமம். எந்தவொரு இடைநீக்கம் அல்லது அத்துமீறலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர்,”பாகிஸ்தான் நேரடியாக தாக்கப்பட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்றும் கூறியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்