லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!
இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையின் போது லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி பந்திபோராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
அப்பொழுது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உயர்மட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு, அனந்த்நாக் மற்றும் அவந்திபோராவில் நடந்த IED குண்டுவெடிப்பில், உள்ளூர் பயங்கரவாதிகளான அடில் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் அழிக்கப்பட்டன. இவர்கள் இருவரும் ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பைசரனில் நடந்த கொடிய தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.