இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!
பாகிஸ்தான் ஏவுகணையை வீசி தாக்கினால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது.

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது.
இதன் கீழ், இன்று கடற்படை ஐஎன்எஸ் சூரத்திலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழிவு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மேற்கொண்ட நிலையில், இந்தியாவும் பதிலடியாக ஐ.என்.எஸ். சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
#IndianNavy‘s latest indigenous guided missile destroyer #INSSurat successfully carried out a precision cooperative engagement of a sea skimming target marking another milestone in strengthening our defence capabilities.
Proud moment for #AatmaNirbharBharat!@SpokespersonMoD… pic.twitter.com/hhgJbWMw98
— SpokespersonNavy (@indiannavy) April 24, 2025
இந்த ஏவுகணை தரையில் இருந்தும் கூட ஆகாயத்தை நோக்கி தாக்கும் திறன் கொண்டது. மேலும் , இந்த சோதனை, உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாடுகளில் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறனை பிரதிபலிக்கிறது என்று கடற்படை தெரிவித்துள்ளது.