காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

கண்களில் கண்ணீருடன் லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைபுல்லா காசுரி, பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என மறுக்கிறார்.

Saifullah Kasuri

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி ஒரு வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின்  அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் 22ம் தேதி அன்று, மதியம் 02:30 மணியளவில் 4-6 பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று கொண்டது. மேலும், காலித் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சைஃபுல்லா கசூரி, லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதி, இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கபடும் நிலையில், லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, ”ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள்.

உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம். இந்தியா நாடகம் ஆடுகிறது இந்த தாக்குதலை அவர்களே செய்தார்கள். பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சிக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு இந்திய ஊடகங்கள் என்னைப் பொறுப்பேற்கச் செய்துள்ளன.

பாகிஸ்தானும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு சோகமான விஷயம். இந்தியா பாகிஸ்தானை அழிக்க விரும்புகிறது. பாகிஸ்தானியர்களை கட்டாயப்படுத்தி தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுகிறது என்று கூறியதோடு, இந்த விவகாரத்தில் உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் என்று கண்களில் கண்ணீருடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்