பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பற்றி தகவல் தெரிவித்தால், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு என காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு – காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு நடத்தியது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
எனவே, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பயங்கரவாதிகள் பிர் பஞ்சால் மலைத்தொடரின் மேல் பகுதிகளுக்கு தப்பியதாக நம்பப்படுகிறது.ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் (Drones), மற்றும் நவீன கண்காணிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள்.
அதே சமயம் விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மூன்று பயங்கரவாதிகள் (ஆசிஃப் ஃபவுஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா) அடையாளம் காணப்பட்டு, அவர்களின் ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சூழலில், அனந்தநாக் காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 20 லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பை அனந்தநாக் காவல்துறை (Jammu and Kashmir Police, Anantnag) வெளியிட்டடு தொடர்பு எண்கள் பற்றிய விவரத்தையும் அறிவித்துள்ளது. அதன்படி, …SSP அனந்தநாக் (9596777666) மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை (9596777669) ஆகிய என்களை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவிக்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025