Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த செய்திகள் கீழே நேரலையில் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தத் தாக்குதல் குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஏப்ரல் 23, 2025 அன்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு அசைவ மற்றும் சைவ உணவுகளுடன் கூடிய தடபுடலான விருந்து அளித்தார்.அதிமுக-பாஜக கூட்டணியை விரும்பாத சில எம்எல்ஏக்களை சமாதானப்படுத்துவதற்காகவும், கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.