மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!
முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் ஓராண்டு தடை செய்யப்படுவதாக அரசு விளக்கம்

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து ப்ரெட் ஆம்ப்லேட் சாப்பிடுவது வரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் மயோனைஸ் சரியான முறையில் தயார் செய்யப்படவில்லை என்றும்…ஒரு சில இடங்களில் பழைய மயோனைஸ் திரும்ப பயன்படுத்தப்பட்டு வருவதால் உடல் நிலைகுறைபாடு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
எனவே, மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்,தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ஐதராபாத்தில் மையோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தெலங்கானாவில் மையோனைஸ்பயன்பாட்டுக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், வேக வைத்த முட்டையில் கூட மயோனைஸ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025